பட மூலம், REUTERS/Dinuka Liyanawatte, via Daily Nation

ஜனநாயகம் நிலைத்திருக்கின்ற ஒரு சமுதாயத்திலே மக்கள் ஒருவரோடொருவர் இணைந்து தீர்மானமெடுக்கின்ற ஒரு நிச்சயமான தினமாக அமைவது தேர்தல்கள் நடாத்தப்படுகின்ற தினமே ஆகும். அத்தேர்தல்களே அரசியலின் உயிர்த்தோற்றத்தை நேரடியாகக் காணுவதற்கான அனுபவத்தை வழங்குகின்றது. அவ்வகையிலே தேர்தல்கள் என்பன ஜனநாயகத்தின் மகோற்சவம் என்ற ரீதியிலே பொருள் கொள்ளப்படுகின்றது. 15 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையின் வாக்காளர்கள் தற்போது தம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டிருப்பது உள்ளூராட்சி சபை எனப்படுகின்ற ஒரு சிறிய அரசாங்கத்தை அமைப்பதற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கே ஆகும்.

“சிறிய மனிதனின் புள்ளடியின் பலத்தையும்” அறிய வைப்பதற்கான மாற்றமொன்று உருவாகியுள்ளது. அவ்வாறாயின் இதுவரையில், சுமார் மூன்று தசாப்த காலங்களாக நிலவி வந்த வாக்கு முறை உள்ளடங்கலான விகிதாசார பிரதிநிதித்துவ முறைக்குப் பதிலாக இம்முறை பிரயோகிக்கப்படவிருப்பது கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையே (Mixed Member Proportional System) ஆகும். கடந்த காலங்களிலே இந்நாட்டில் நிலைத்திருந்த உறுப்பினர் முறைமையின் பிரதான இலட்சணமாகக் காணப்பட்டது “முதலில் வெற்றிக் கோட்டை அடைபவருக்கு வெற்றி” என்பதாகும். எனினும், பெரும்பான்மையானவர்களின் கருத்து எப்போதுமே சரியானதாக அமையாது என்ற காரணியினை அடிப்படையாகக் கொண்டு பிற்காலத்தில் இந்நாட்டிலே விகிதாசார முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விகிதாசார முறைமையானது ஏலவே நிலைத்திருந்த உறுப்பினர் முறைமையினை விட பொருத்தமானத் தேர்தல் முறைமையாக இருந்த போதிலும் கூட அதனுடன்  அடையாளப்படுத்தப்பட்ட வாக்கு முறைமை தொடர்பாக மக்கள் திருப்தி கொள்ளவில்லை. மக்கள் இம்முறைமையினை அரசியல் கட்சிகளுக்கிடையில் உள்ளக மற்றும் வெளியக மோதல்களைத் தோற்றுவிக்கின்ற ஒரு போட்டி முறையாகவே கருதினர். மேலும், வேறு சிலர் தேர்தல் வன்முறைகளினை உருவாக்குகின்ற ஊற்றாகவே வாக்கு முறையினை அடையாளங் கண்டனர்.

எம்மைப் போன்ற பல வகைப்பட்ட மற்றும் பல மதங்களைக் கொண்ட ஒரு நாட்டிலே அவ்வவ் மக்கள் பிரிவுகளுக்கு இருக்கக்கூடியதான அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறைமையானது இவ்வகையிலே கருத்து முரண்பாடுகளுக்கு உட்பட்டமையானது இலங்கை சமுதாயத்தினரால் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டிய ஒரு காரணியாக அமைந்தது. எவ்வாறெனினும் உலகத்திலே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேர்தல் விதியாக அமைவது “ஒரு நபருக்கு ஒரு வாக்கு” என்பதுவே ஆகும். ஒவ்வொரு வாக்காளருடைய வாக்கிற்கும் சமமான பெறுமதியினை வழங்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும். 20​12ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூராட்சி சபை தேர்தல்கள் (திருத்தச்) சட்டம் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்ட தேர்தல் முறைமையின் அடிப்படையும் இதுவே ஆகும்.

புதிய தேர்தல் முறைமையின் விசேடமான அம்சங்கள்

  1. தொகுதியினை அடிப்படையாகக் கொண்டமைந்த எல்லை நிர்ணயம்: இன்று முழு நாடும் 4919 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒரு உறுப்பினர் தொகுதி (ஒரு உறுப்பினரை உடையது), பல் உறுப்பினர் தொகுதி (இரண்டு மற்றும் மூன்று உறுப்பினர்களைக் கொண்டது) என்றவாறாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கான பொறுப்பு தேசிய எல்லை நிர்ணயக் குழுவைச் சார்ந்தது. எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவானது தம்முடைய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இத்தொகுதிகளானவை ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவு அல்லது சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை உள்ளடக்கிய மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதிகள் இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஆட்சி அலகாக விளங்குகின்றன.
  2. உறுப்பினர்களைத் தெரிவு செய்கின்றமை: கலப்பு முறைமையின் கீழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள். அவ்வாறாயின் 60% ஆனவர்கள் தொகுதி முறைமையின் கீழும் 40% ஆனவர்கள் விகிதாசார முறைமையின் கீழும் தெரிவு செய்யப்படுவார்கள். சபையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 10% ஆன பெண்கள் தொகுதிக்காக போட்டியிடுதல் வேண்டும். அவ்வகையிலே சதவீத அடிப்படையிலே இயற்றப்பட்ட இம்முறைமையின் பிரதான இலட்சணம் யாதெனில் ஒரு சபைக்குத் தெரிவு செய்யப்படுகின்ற அனைத்து உறுப்பினர்களையும் விகித அடிப்படையிலே தெரிவு செய்தலே ஆகும். ஒவ்வொரு சபைக்கும் தெரிவு செய்யப்படுகின்ற உறுப்பினர்கள் பத்து பேரில் ஆறு பேர், அதாவது 60% ஆனவர்கள் நேரடி வாக்குகளின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வேளையிலே ஏனைய அனைவரும் குறிப்பிட்ட அரசியல் கட்சியின் செயலாளர் அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவரினால் தெரிவு செய்யப்படுவார்கள். அவ்வாறெனின் ஒவ்வொரு அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு பெற்றுக்கொண்ட செல்லுபடியாகின்ற வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அவ் 40% ஆனவர்கள் பெயர் குறிக்கப்படுவார்கள்.
  3. உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான எளிய முறைமை மற்றும் வாக்கு பத்திரம்: வாக்குப் பத்திரமானது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. வாக்குகளை அடையாளப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்களுடைய பெயர் மற்றும் சின்னங்கள் காணப்படுகின்ற வாக்குப் பத்திரத்தில் புள்ளடியிடுதல் மாத்திரம் போதுமானது. முன்னர் மூன்று வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளிப்பதற்கு வாக்காளர்களுக்கு காணப்பட்ட சந்தர்ப்பம் தற்போது இல்லாது போயுள்ளது. வாக்காளர்களுடைய முன்னுரிமைத் தெரிவிற்கான வாய்ப்பு இழக்கச்செய்யப்பட்டிருக்கின்ற வேளையிலே வேட்பாளர்களைத் தெரிவு செய்ய வேண்டியது அரசியல் கட்சியின் செயலாளர் அல்லது சுயேட்சைக் குழுவின் தலைவர் ஆகும். இதன்படி தேர்தலுக்கு முந்தைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற பெயர் நியமனம் தீர்மானம் மிக்கதாகக் கருதப்படும்.
  4. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துதல்: பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவமானது முதற் தடவையாக உட்சேர்க்கப்பட்டுள்ளது. அது 25% ஆன அளவில் அல்லது ஒதுக்கீட்டு முறையிலாகும். இதே வேளையில் ஒவ்வொரு உள்ளூரதிகார சபையிலும் நியமிக்கப்படவிருக்கின்ற உறுப்பினர் எண்ணிக்கையின் 1/4 பங்கு அதாவது 25% ஆன பெண் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வகையிலே இது அதிகரித்து வருகின்ற சவால்களையும், சமூக அரசியல் தேவைப்பாடுகளையும் முன்னிறுத்தி எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும். அதன்படி புதிய முறையின்படி இனி நடக்கவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலே தெரிவு செய்யப்படக்கூடிய மிகக் குறைந்தளவான பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 1,900 இற்கும் அதிகமானதாகும். இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலிலே அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் தெரிவு செய்யப்பட்ட பெண்களுடைய மொத்த எண்ணிக்கை 86 ஆகும்.
  5. மக்களுக்கு நெருக்கமான மக்கள் பிரதிநிதிகளின் தோற்றம்: தொகுதி அடிப்படையில் செல்கின்ற இந்நேரம் தொடக்கம் மக்களுக்கு மிகவும் நெருக்கமான அரசியல் அலகொன்று உருவாவதற்கான சந்தர்ப்பம் அமைந்துள்ளது. அதன்படி இனி உறுப்பினர்கள் இல்லாத தொகுதியொன்று இராத அதேவேளை இரண்டாவது முறையும் மக்களுடைய அபிமானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருப்பின் பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்ற வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளது. அத்துடன், உறுப்பினர்களின் செயற்பாடுகளை மிகவும் நெருக்கமாக கண்காணிப்பதற்கான அவகாசம் வாக்காளர்களுக்குக் கிட்டியுள்ளது.
  6. இளைஞர் ஒதுக்கீட்டின் இழப்பும் இரட்டிப்பாகிய உறுப்பினர் எண்ணிக்கையும்: உள்ளூராட்சி சபை என்பது இளைய அரசியற் தலைவர்களை உருவாக்குகின்ற ஒரு விசேடமான இடமாகும். அதன்படி இதுவரையில் பெயர் நியமனப் பத்திரத்தில் 40% ஆன ஒதுக்கீடு இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இம்முறை இவ்வாய்ப்பு இழப்பிக்கச் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்குப் பதிலாக உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையில் முன்னர் காணப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை 53 ஆகும். இம்முறை அது 110 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், இம்முறை நிச்சயிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையினை கொண்ட ஒரு உள்ளூராட்சி சபை ஒன்று இல்லை. ஒரு சபையின் தேர்தல் முடிவுகள் வெளிவந்த காலத்திற்குப் பின்னரும் கூட அச்சபைக்கு மேலதிகமான உறுப்பினர்களை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இவ் உறுப்பினர் தெரிவு மேலதிக உறுப்பினர் ஆசனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது (Overhang).
  7. தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் செலவு: இத்தேர்தல் முறைமையின் அடிப்படை நோக்கு “பிரதேசத்திற்கு பொறுப்பு கூறுகின்றதான பிரதிநிதிகளை பிரதேசத்திலிருந்து தெரிவு செய்தல்” ஆகும். இத்தகைய ஒரு முறையினை அமுல்படுத்த வேண்டியதன் அவசியமேற்பட்டது தேர்தல் பிரசார வியாபாரத்திற்காக செலவிடுகின்ற எல்லையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவே ஆகும். இம்முறையின்படி பிரதேசத்திலிருந்து வருகின்ற மிகவும் நெருக்கமான வேட்பாளர்கள் மிகவும் சிறிய அளவிலான வாக்காளர் குழுவிற்கே தேர்தல் பிரசாரங்களை செய்ய வேண்டியுள்ளது. எனினும், மட்டுப்படுத்தப்பட்ட வாக்காளர் குழாமினைக் கொண்ட ஒரு தொகுதிக்கு அளவு கடந்த பணம் மற்றும் வளங்களை செலவழிப்பது சாத்தியமற்றதொன்றல்ல. ஆகவே, இச்செலவுகளைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பது தேர்தல் செலவுகளை வரையறைப்படுத்துவதற்கான பொருத்தமான சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமே ஆகும்.
  8. தலைவரைத் தெரிவு செய்தல்: பெரும்பான்மையான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள போது தலைவரைத் தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு அக்கட்சியின் செயலாளரை அல்லது சுயேட்சைக் குழுவாயின் அதன் தலைவரைச் சாரும். அவ்வாறு இல்லையெனில், அச்செயற்பாடு உள்ளூராட்சி சபை ஆணையாளர் மூலமாகக் கூட்டப்படுகின்ற முதற் கூட்டத்திலே இடம்பெறும். அப்பதவிக்காக முன் வருகின்ற உறுப்பினர்களிடையில் அதிக விருப்பினைப் பெற்றுக் கொள்கின்ற உறுப்பினர் குறிப்பிட்ட இப்பதவிக்கு நியமிக்கப்படுவார்.
  9. தேர்தல் முடிவுகள் மற்றும் உள்ளூராட்சி சபை ஆசனங்களை அமைத்தல்: ஒரு உள்ளூராட்சி சபைக்காக அளிக்கப்பட்டுள்ள செல்லுபடியாகின்ற வாக்குகளின் எண்ணிக்கை, அக்குறிப்பிட்ட உள்ளூராட்சி சபைக்காக ஒதுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையினால் பிரிக்கப்படும். அவ்வாறு பிரித்து வருகின்ற எண்ணிக்கையானது தீர்மானிக்கின்ற எண்ணாகும் (Qualifying Number). தீர்மானிக்கின்ற எண் எனப்படுவது ஒரு உறுப்பினர் பதவிக்காக பெற்றுக்கொள்ள வேண்டிய ஆகக்குறைந்த வாக்கு எண்ணிக்கையாகும். இதேவேளை, அவ்வவ் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை தீர்மானிக்கின்ற எண்ணுடன் இணைத்துப் பார்க்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.
  10. பெண் உறுப்பினர்களைத் தெரிவு செய்தல்: ஒரு உள்ளூராட்சி சபைக்காக போட்டியிடுகின்ற அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை அனைத்தும் கூட்டப்படும். அதேவேளை, அவ் எண்ணிக்கை உள்ளூராட்சி சபைக்காக ஒதுக்கப்பட்டுள்ள பெண்களின் உறுப்பினர் எண்ணிக்கையினால் பிரிக்கப்படும். அதன்போது கிடைக்கின்ற விடைக்கு ஏற்ப அவ்வவ் அரசியல் கட்சி மற்றும் சுயேட்சைக்குழு பெயரிடக்கூடிய ஆகக்குறைந்த பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை பெயரிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அவ்வவ் அரசியல் கட்சிகளுக்கு மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவிக்கும். இக்கணக்கீட்டிற்காக கீழ் குறிப்பிட்டுள்ள அடிப்படைகளில் உறுப்பினர்களை பெற்றுக் கொண்டுள்ள அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுக்கள் கவனத்தில் கொள்ளப்படாது.
  • தமக்கு உரித்தாக்கப்படவேண்டிய உறுப்பினர் எண்ணிக்கைக்கு சமனான அல்லது அதற்கு மேலதிகமான உறுப்பினர் எண்ணிக்கையினை தொகுதி அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ள அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு
  • உள்ளூராட்சி சபைக்காக வழங்கப்பட்டுள்ள செல்லுபடியாகின்ற வாக்குகளின் எண்ணிக்கையில் 20% ஆன வாக்குகளையேனும் பெற்றுக்கொள்ளாத அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு அல்லது பெற்றுக் கொள்ள வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை மூன்றிற்கும் குறைவாக இருப்பின் இரண்டு அல்லது ஒன்றினைப் பெற்றுக் கொண்டுள்ள அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழு

உறுப்பினர் எண்ணிக்கை: அன்றும் இன்றும்

மாநகர சபை நகர சபை பிரதேச சபை மொத்த எண்ணிக்கை
உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை – அன்று

23

41

271

335

உள்ளூராட்சி சபைகளின் எண்ணிக்கை – இன்று

24

41 276

341

மொத்த உறுப்பினர் எண்ணிக்கை – அன்று

4486

மொத்த பெண் உறுப்பினர் எண்ணிக்கை- அன்று

86

மொத்த உறுப்பினர் எண்ணிக்கை – அன்று 8356 குறைந்தளவாக இருக்க வேண்டிய பெண் உறுப்பினர் எண்ணிக்கை – இன்று

1986 இற்கு மேலும் அதிகரிக்கலாம்


 மஞ்சுள கஜநாயக்க

தேசிய ஒருங்கிணைப்பாளர்

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV)