படம் | Eranga Jayawardena Photo, AP

முஸ்லிம் மக்கள் மற்றும் அவர்களது வணக்கஸ்தலங்கள், வர்த்தகங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடும் நோக்கில் மக்களை ஊக்கப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில பிரதான ஊடகங்களின் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்டு முஸ்லிம் சமூகத்தை மற்றும் இஸ்லாம் மதத்தை இலக்காகக் கொண்ட வெறுக்கத்தக்க பேச்சுக்களில் ஈடுபட்டுவருபவர்களுக்கு எதிராக சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்று தெரிவிக்கும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு, சட்டப்புத்தகங்களில் உள்ள சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால் சட்டத்தின் ஆட்சியின் மேல் பாதகமான விளைவை உண்டுபன்னும் என்றும் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

“தேசிய சட்டங்கள் மற்றும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளிற்கு அமைய வன்முறையை ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கின்ற வெறுப்பான பேச்சுகள் பரவாது நிறுத்துவதற்கு உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதற்கும் வன்முறைகளை தடுப்பதற்கும் அரசாங்கத்திற்குப் பொறுப்புள்ளது. அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறுவதானது நாட்டின் மனித உரிமைகள் செயற்பாடுகள் மீது கறுப்புப் புள்ளியாக இருத்தல் மட்டுமன்றி, அதிமேதகு ஜனாதிபதியானவர் அதிமுக்கியத்துவம் கொடுக்கும் நல்லிணக்கத்தை அடைய பாரிய தடையாகவும் இருக்கும்.”

அறிக்கையை முழுமையாக வாசிக்க, இங்கு கிளிக் செய்யவும்.