பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக, தை மாதத்தின் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்நாள் பட்டிப் பொங்கல் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களுடன் ஒன்றி வாழ்வதற்காகவும், உழவுக்கு உயிரூட்டுவதனாலும் காலநடைகளுக்கு நன்றி தெரிவித்து இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. முக்கியமாக, மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுவது தமிழர்களின் மரபு.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

###

இலங்கை, மலையகத்திலும் மாட்டுப்பொங்கள் விழா கடந்த 15ஆம் திகதி விசேடமாக இடம்பெற்றது. மஸ்கெலியா, பிறவுண்ஸ்விக் தோட்டத்தில் மக்கள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடியதை ஒளிப்படம் ஊடாக கீழே பார்க்கலாம்.