படம் | SrilankaBrief

இலங்கை, நல்லாட்சி ​அரசாங்கத்தின் இரண்டாவது வருடத்தை கடந்துள்ள இத்தருணத்தில் மனிதர்களுக்கெதிரான அட்டூழியங்கள் நிறைந்த குற்றச்செயல்கள் சார்ந்ததாக வகைபொறுப்புக்கூறுதல் சம்பந்தமாகவும் அவற்றுக்கு பரிகாரம் காணப்படுதல் சம்பந்தமாகவும் அக்கறைகொண்டவர்கள் இலங்கையின் அரசியலை முன்நகர்த்தும் விடயத்தில் புதுவிதமானதும் பல்வகைமையுடையதுமான பல சவால்களை எதிர்நோக்கியவர்களாக உள்ளனர். மனித உரிமைகள் பேரவையின் 30/1 இலக்கமுடைய பிரேரணை ஊடாகவும் நீதி மற்றும் வகைப்பொறுப்பு ஆகிய விடயத்தில் ஐயப்பாட்டிற்கு இடமில்லாத வகையில் இலங்கை காட்டிய அப்போதைய அர்ப்பணிப்பு மூலமாகவும் வரலாற்று ரீதியான முன்னேற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த உத்வேகம் நாளடைவில் கணிசமானளவு வீழ்ச்சியடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு புறத்தில் ஜனாதிபதி சிறிசேன அரசியல் ரீதியிலான தீர்வொன்றை எட்டிக்கொள்ளும் விடயத்தில் மெச்சத்தக்களவிலான உண்மைத்தன்மையொன்றை வௌிப்படுத்திய போதும் மறுபுறத்தில் விசேட நீதிமன்றங்களின் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்கும் விடயத்தை முற்றுமுழுதாக நிராரித்துள்ள நிலையில் இவ்வாறான நிலைகள் தடுக்கப்படாமல் தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் இவ்வாறான தடைகள் நிலைமாறுகால நீதிசார்ந்த ஏனைய அம்சங்களுக்கும் பரவிச்செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இலங்கை அரசியலை அவதானிக்கும் எந்தவொரு அவதானிப்பாளரும் முழுமையாக எதிர்பார்க்கக்கூடிய வகையில் இந்த நகர்வுக்கு தடையாக இருக்கின்ற ஒரேயொரு காரணம் இந்த அரசியல் சவால் மாத்திரமல்ல. இதனை விட மிகவும் சூட்சமமான ஆயினும் நீதியின் பால் எவ்விதத்திலும் குறைவற்ற விதத்தில் அசசுறுத்தல்கள் எழுந்தவண்ணம் உள்ளதாகவும் இவை தடுக்கப்படாவிடின் நீதிக்கான முன்னேற்றம் குழிதோன்றி புதைக்கப்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பல செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக எச்சரித்துள்ளனர். நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறையை வரிசைப்படுத்துதல் எனும் கருத்தமைவும் “முதலாவதாக உண்மை, பின்னர் நீதி” எனும் அணுகுமுறையை அங்கீகரித்தலும் தற்போது இலங்கையில் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. கிஹான் குணதிலக அண்மைக்கால நேர்காணலொன்றின் போது கூறுவதாவது,

உள்ளூர் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொருத்தமட்டில் வரிசைப்படுத்தலின் போது வகைப்பொறுப்பு எனும் விடயம் கடைசி நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆயினும், சர்வதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆலோசனையாளர்களை பொருத்தமட்டில் இவ்வாறானதொரு கண்ணோட்டம் தொடர்ச்சியாக இருந்துவரவில்லை. இந்நிலையில், உள்ளூர் கோரிக்கைகளுக்கு பணிவிணக்கம் காட்டுவதில் காணப்படும் குறைபாடு அல்லது அதற்கு செவிமடுப்பதில் உள்ள குறைபாடு வகைப்பொறுப்பு பொறிமுறையொன்றை தாபிக்கும் செயன்முறையின் உத்வேகமிகு தருணத்தை இழக்கச்செய்துள்ளதோ என எண்ணத் தோன்றுகின்றது.

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை தற்போது பிரதான விடயமாக மாறியிருப்பதும் முறையானவாறு இடம்பெறுவதும் கவனிக்கத்தக்கதொரு விடயமாக இருக்கின்றது. காணாமற்போன ஆட்களைப் பற்றிய அலுவலகத்தையும் விசேட நிதிமன்றமொன்றை நிறுவுவதையும் சார்ந்த சட்டவாக்கத்தை அங்கீகரித்துக்கொள்ளும் விடயத்தின் தீர்மானகரமான செயற்பாட்டிற்கு நான் ஆதரவளித்தேன். ஆயினும், தற்போது விசேட நீதிமன்றமொன்றை தாபிக்கும் விடயத்தில் ஒரு தாமதம் ஏற்பட்டிப்பதுடன் புதியதொரு அரசியலமைப்பொன்றை உருவாக்கும் விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தீர்மானகரமான கட்டமொன்றை எட்டியிருக்கின்ற நிலையில் நிலைமாறுகால நீதி சார்ந்த சட்டவாகத்தை உருவாக்கும் விடயத்தில் அந்தளவிற்கு அக்கறையின்மையும் தேவையற்ற நிலையும் உருவாகியிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. ஆகவே, சர்வஜன வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் அரசாங்கம் எந்த நடவடிக்கைகளை எடுத்தாகவேண்டும் எனும் கேள்வி எழுகின்றது. அவ்வாறான சர்வஜன வாக்கெடுப்பொன்றில் நல்லாட்சி அரசாங்கம் வெற்றிபெறும் நிலையில் அது அவ்வாறான வாக்கெடுப்பொன்றின் வெற்றியின் மூலம் குதூகலிக்கின்ற நிலையில் ராஜபக்‌ஷ பிரிவினருக்கு தொடரச்சியான மூன்றாவது தோல்வியாக அது மாற்றமடையும் நிலையில் அவை அரசியல் மூலதனமாக பிரயோகிக்கப்பட்டு இரண்டாவது வெற்றியைும் பெற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததொரு விடயமாக மாறவிடும். ஆகவே, அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் வெற்றியை உடனடுத்து என்ன செய்ய வேண்டும்? அண்மைக்கால கட்டுரையொன்றில் இசபெல் லெசி மற்றும் இந்துமினி ரந்தெனிய (Isabelle Lassee and Indumini Randeny) ஆகியோர், “முதலாவதாக உண்மை, அடுத்ததாக நீதி” எனும் வரிசைப்படுத்தல் சிலர் எவ்வாறாக கூறியிருப்பினும் அது உலகளாவிய சிறந்த வழக்கமாக இல்லாத நிலையில் இலங்கைக்கும் அந்தளவு பொருந்துவதாக இல்லையென்றும் நீதிக்கான முன்னேற்றத்திற்கு தடையாகவும், தண்டனையினின்று விலக்கீட்டுரிமைக்கு எதிரான வழிவகைகளை கொண்டிருக்காத நிலையில் உண்மையை கண்டறியும் முயற்சியை நலிவடையச் செய்யும் எனவும் தெரிவிக்கின்றனர். இதேவிதமாக, விசேட நீதிமன்றத்துடன் உடனிணையாத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ அல்லது நம்பகத்தன்மையுடையதாகவோக இருக்க முடியாதெனவும், அது தண்டனையினின்று விலக்கீட்டுரிமைக்கான வாய்ப்புள்ளது எனும் எண்ணத்தை ஓங்கச்செய்வதற்கும், இந்த செயன்முறையிலிருந்து பாதிக்கப்பட்டவர்களையும் சிவில் சமூகத்தையும் அந்நியப்படுத்துவதாக அமைந்துவிடுமெனவும் மனித உரிமை பாதுகாவலர்களாக தொழிற்படுபவர்களும் ஒருமித்த குரலில் எச்சரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டின் இறுதியாகின்றபோது உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழு தாபிக்கப்பட்டு செயற்படுத்தப்படுமெனவும் விசேட நீதிமன்றம் பின்னர் தாபிக்கப்படுமெனவும் நல்லிணக்க பொறிமுறையை ஒருங்கிணைப்பதற்கான அரச செயலகத்தினால் வௌியிடப்பட்ட ஆவணமொன்றிற்குப் பதிலளிக்கும் வகையில் சிவில் சமூகத்தின் இக்கூற்று வௌியிடப்பட்டது.

எனினும், அரசாங்கத்தைப் பொருத்தமட்டில் வரிசைப்படுத்தல் சம்பந்தமான விடயத்தில் மிகவும் இறுக்கமானதொரு நிலைப்பாட்டினை கொண்டிருக்காததால் இந்நகர்வுகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிலைப்பாட்டில் மாற்றமொன்றிற்கான சமிக்ஞையை வௌிப்படுத்துவதற்கான அவகாசம் அதிகமாக காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேச ஆலோசனையின் பேரில், “முதலில் உண்மை பின்னர் நீதி “எனும் வகையிலான விருப்புத் தெரிவொன்றை உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஒருங்கிணைப்பதற்கான செயலகம் விருப்பத்தெரிவாக்கிக்கொண்டு இந்த வரிசைப்படுத்தலை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது என கருதுவதற்கான போதியளவு ஆதாரங்கள் உள்ளன.

இந்நிலைமை தடுக்கப்படாதவிடத்து “முதலில் உண்மை பின்னர் நீதி” எனும் இந்த அணுகுமுறை இலங்கையில் நிலைமாற்றுக்கால நீதி செயன்முறையில் பாரிய ஆபத்துமிக்க பெறுபேறுகளை கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் எழக்கூடும். அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவொன்றை தாபித்தல் சம்பந்தமாக பெருமளவு ஆதரித்து செயற்படும் நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு விசேட நீதிமன்றமொன்றை அமைப்பதற்கானதொரு நேர்மையற்ற மூஸ்தீபு எனக்கூறி சிங்கள பௌத்த தேசியவாதிகள் அதனை எதிர்க்கின்ற அதேவேளை, மனித உரிமை பாதுகாவலர்களும், சிவில் சமூகமும் அரசாங்கத்தின் தமிழ் வாக்காளர்களும் இதனை வேறு பல காரணங்களின் அடிப்படையாகக் கொண்டு எதிர்த்திடக்கூடும். நீதிமன்ற வழக்கு விசாரணையற்றதொரு உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு வகைப்பொறுப்புக்கூறுதலிருந்து கவனத்தை திசைமாற்றும் முயற்சியென மனித உரிமை பாதுகாவலர்களும், சிவில் சமூகமும் அரசாங்கத்தின் தமிழ் வாக்காளர்களும் கருதுவதை தவிர்க்க இயலாதென்பதுடன் இச்செயன்முறையை சிலர் பகிஷ்கரிப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன. வௌிவாரியான ஆலோசகர்கள் அறியப்பட்டுள்ள உலக போக்குகளில் ஈர்க்கப்பட்வர்களாகவும் இலங்கையின் நீதி சார்ந்த விடயத்தில் மற்றுமொரு ஆணைக்குழுவை முன்னுரிமைப்படுத்துவதினால் விளையக்கூடிய பேருங்கேடு காரணமாக இழக்கவேண்டியவைகளை பற்றியோ அல்லது அதற்கான நிகழ்வியல்பு பற்றியோ போதியளவுக்கு கிரகித்துக்கொள்ளாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளதாயினும், தனது நிலைமாற்று நீதிக்கான செயன்முறையை வெற்றிகரமான அடைவினை நோக்கி கொண்டுசெல்வதற்கான அரசியல் ரீதியான பொறுப்பு அரசிற்கு உண்டு. ஆகக்குறைந்த பட்சம் முதலில் உண்மை பின்னர் நீதி எனும் பிழைவழி இட்டுச்செல்லப்பட்டுள்ள அணுகுமுறையை கட்டாயமாக பின்பற்றும் செயன்முறையில் உள்நோக்கிய வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் அரசியல் ரீதியான கரிசனை அதற்கு உள்ளது. ஆகவே, முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு உள்நாட்டிலிருந்து எழும் குரலுக்கு அரசாங்கம் செவிமடுத்தல் முக்கியமானதாகும்.

இதேவேளை, நிலைமாறுகால நீதி சம்பந்தமாக இலங்கையுடன் பணியாற்றுகையில் ஐக்கிய நாடுகள் சபை தான் பயணிக்கும் ஆபத்துமிக்க செல்வழியை சரிபார்த்துக் கொள்வதற்காக இடையீடு செய்வதற்கான பொறுப்பினையும் அச்சபை கொண்டுள்ளது. மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர் ஸ்தானிகர் செயிட் உள்ளிட்ட உயர்மட்ட அலுவலர்கள் இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதி சார்ந்தாக ஐக்கிய நாடுகள் கொண்டுள்ள ஈடுபாடு சம்பந்தமாக அதிகரித்துவரும் சிவில் சமூகத்தின் ஐயத்தை போக்குவதற்காக உடனடியாக செயற்பட ஆரம்பித்தல் அத்தியாவசியமானதாகும். இலங்கையின் மனித உரிமைகள் விடயத்தில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடத்தக்க விதிவிலக்காவும் இருக்கின்றதெனினும் ஐக்கிய நாடுகளின் ஈடுபாடு ஓரளவிற்கு நற்பெயருக்கான கலங்கத்தினைக் கொண்டதொரு வரலாற்றினை கொண்டுள்ளதுடன், அதனை தனது “இலங்கையில் ஐ.நாவின் தலையீடு தொடர்பான உள்ளக பரிசீலனை” அறிக்கையிலும் மிகத்தௌிவாக ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் “முதலில் உண்மை பின்னர் நீதி” எனும் அணுகுமுறையை அங்கீகரிப்பதை ஜீரணிக்க இயலாமலிருப்பதன் காரணம் இலங்கை பற்றிய விரிவான தனது மனித உரிமை அறிக்கையில் உண்மை மற்றும் நல்லிணகத்திற்கான ஆணைக்குழுவொன்றை அது பரிந்துரைக்காமல் இருந்ததுடன் அவர்களின் அடிப்படை விதப்புரையாக சிறப்பு கலப்பு நீதிமன்றமொன்றை அமைப்பதையே குறிப்பிட்டிருந்தது. இந்த சூழமைவில் உயர் ஸ்தானிகர் செயிட்டினால் மனித உரிமைகள் பேரவைக்கு 2017ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் வகைபொறுப்பு சம்பந்தமாக கவனத்தை குவிமையப்படுத்துதல் நீதியை தாமதித்தல் சம்பந்தமாக எழுந்துள்ள தப்பெண்ண முயற்சிகளை தீர்த்தல் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பாதிக்கப்பட்வர்களின் அக்கறைகளுக்கு இடமளித்தல் போன்றவைக்கு சரியான நேரத்திலான வாய்ப்புகளை வழங்கியிருந்தது.

இலங்கையின் நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் செவ்வனே தொழிற்பட வேண்டுமாயின் யாருக்கு நன்மை கிடைக்க வேண்டுமென எண்ணங்கொண்டு அப்பொறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதோ அவர்களுடைய நலன்களுக்காக கட்டாயமாக அவை செயற்படுமிடத்தே சாத்தியமானதாக அமையும். அரசாங்கத்திற்குள்ளேயுள்ள சீர்திருத்தவாதிகளும், மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் உயர்மட்ட அதிகாரிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் காலவரையின்றி நீதி தாமதிக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை தடுத்துநிறுத்துவதற்கு உறுதிபூண்டு செயற்படுதல் அவசியமானதாகும். இந்நிலையில், இச்செயன்முறையை அவர்கள் 2015ஆம் ஆண்டு ஜெனீவாவில் வௌிப்படுத்திய அதே உத்வேகத்துடனும் கலந்துரையாடுவதற்கான பொறுமைமிக்க விருப்பத்துடனும் மேற்கொண்டு வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு கடப்பாடு உடையவர்களாகின்றனர். நீதி இல்லாததொரு நிலைமாறுகால நீதி பயனற்றதாகவும் தேவையற்றதாகவுமே அமைய முடியும். அது தடுத்து நிறுத்தப்பட முடியும் என்பதுடன் கட்டாயமாக தடுத்துநிறுத்தப்படவும் வேண்டும்.

நிரான் அங்கிற்றல்