படம் | TAMIL GUARDIAN

இலங்கையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜனநாயகம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவினை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கான பொறிமுறையொன்று அவசியம் என 42.2% இலங்கையர்கள் கருதுகின்றனர் என அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை 44.2% சதவீதமானவர்கள் பொறிமுறை தேவையில்லை எனக் கருதுகின்றனர் என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசாரணை வேண்டுமெனக் கூறுபவர்களில் (42.2%) 47.3% இலங்கையர்கள் உள்நாட்டுப் பொறிமுறையாக இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதேசமயம், 9.2% இலங்கையர்கள் சர்வதேசப் பொறிமுறை வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ‘சோஷல் இன்டிகேட்டர்’ இனால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, நாட்டின் 25 மாவட்டங்களில் உள்ள 4 பிரதான சமூகத்தவர்கள் மத்தியிலும் நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டாயிரத்து 102 பேர் இந்த ஆய்வில் பங்கேற்றிருந்தனர்.

ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் சுருக்கமாக கீழே தரப்பட்டுள்ளது (இலங்கையில் போருக்குப் பின்னரான ஜனநாயகம் – பெப்ரவரி 2016, அறிக்கையை (ஆங்கிலம்) முழுமையாக வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்).

  • நாட்டில் தற்போதைய பொருளாதார நிலைமையானது நல்லது என அனேகமாக 30% இலங்கையர்கள் நம்புகின்றனர். அதேசமயம் கிட்டத்தட்ட 45% சதவீதமானவர்களது கருத்து அது மோசமானது என்பதாகும். இலங்கையர்களில் 21.7% சதவீதமானவர்கள் அது அதே நிலையிலேயே உள்ளது என நம்புகின்றனர்.
  • தற்போதைய அபிவிருத்தி செயற்பாடு தொடர்பாக பதிலளிப்பவர்கள் காண விரும்பும் முக்கியமான மூன்று பெறுபேறுகளாவன, வேலையின்மைக்குத் தீர்வுகாணல், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்புகளில் அதிகரிப்பு மற்றும் சிறந்த கல்வி வசதிகள்.
  • இலங்கையர்களில் பெரும்பாலும் 30% நாட்டின் வாழ்க்கைச் செலவை கையாள்வதில் அரசாங்கத்தின் செயல் நிறைவேற்றம் தொடர்பில் அவர்கள் திருப்தியடைகின்றார்கள் எனத் தெரிவித்தனர். அதேநேரம் 51.2% சதவீதமானவர்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
  • தொகுதி/ மாவட்டத்தினுள் சிறு மற்றும் நடுத்தர அளவிலான அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பொருத்தமான நிறுவனம் என 44.2% சதவீதமான இலங்கையர்கள் நம்புகின்றனர்.
  • நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பங்களிப்பு/ பெண்கள் பிரதிநிதித்துவம் போதுமானது அல்ல என 72.6% இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, இதனை 10.1% சதவீதமானவர்கள் இக்கருத்தை மறுக்கின்றனர்.
  • பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஒரு நிலையான ஒதுக்கீடு (கோட்டா) தொடர்பில் இலங்கையர்களில் 70.5% சதவீதமானவர்கள் நாடாளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு ஒரு ஒதுக்கீடு (கோட்டா) இருத்தல் வேண்டும் என நம்புகின்றனர். அதேவேளை 9.6% இலங்கயைர்கள் ஒரு ஒதுக்கீடு தேவையென நினைக்கவில்லை.
  • இலங்கையர்களில் 52% சதவீதமானவர்கள் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் தேர்தலை வெல்வதில் தகுதியானவர்கள் மற்றும் ஆற்றல் மிக்கவர்கள் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். அதேவேளை, 23.7% சதவீதமானவர்கள் இதே கருத்தை மறுக்கின்றனர்.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், பெண்களுக்கு அவர்களது உடன் தெரிவான ஆண் உறுப்பினர்களிலும் பார்க்க குறைந்தளவே தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உள்ளது என 51.4% சதவீத இலங்கையர்கள் கருதுகின்றனர். 21.8% சதவீதமானவர்கள் இதே விடையத்தை மறுக்கின்றனர்.
  • அமைச்சர்களின் எண்ணிக்கை அரசியலமைப்பின் மூலம் முடிவுசெய்யப்பட வேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் அத்தகைய அமைச்சர்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதற்கான எந்தவொரு சந்தர்ப்பமும் இருக்கக் கூடாது என கிட்டத்தட்ட 50% சதவீதமான இலங்கையர்கள் குறிப்பிடுகின்றனர்.
  • சமயத்தலைவர் (மதகுருக்கள்/ பிக்குகள்) நன்னெறி சாராத/ சட்டரீதியற்ற நடத்தை அல்லது தவறானா நடத்தை காரணமாக குற்றவாளியாக உறுதிசெய்யப்பட்டால், கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என்பதை பெரும்பான்மையான (74.4%) சதவீதமான இலங்கையர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
  • தேசிய கீதமானது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் பாடப்பட வேண்டும் என்பதை 48.8% இலங்கையர்கள் ஏற்றுக்கொள்வதுடன், 41.3% இலங்கையர்கள் இதே விடயத்தை மறுக்கின்றனர்.
  • போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான பொறிமுறை இருத்தல் வேண்டுமென 42.2% இலங்கையர்கள் கருதுகின்றனர். அதேவேளை 44.2% சதவீதமானவர்கள் அத்தகைய பொறிமுறை தேவையில்லை எனக் கருதுகின்றனர்.
  • போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைப் பற்றிய ஒரு நம்பகத்தன்மையான விசாரணை இருத்தல் வேண்டுமெனக் கூறுபவர்களில், 47.3% இலங்கையர்கள் பிரத்தியேகமாக உள்நாட்டுப் பொறிமுறை இருக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தனர். அதேசமயம், 9.2% இலங்கையர்கள் பிரத்தியேகமாக சர்வதேசப் பொறிமுறை வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்தனர்.
  • இன மனப்பான்மையில் நோக்கும் போது, 69.3% இதையே சுட்டிக்காட்டும் வகையில் பிரத்தியேகமாக உள்நாட்டுப் பொறிமுறையை பெரும்பாலான சிங்களச் சமூகமே ஆதரித்துள்ளது.
  • பிரத்தியேகமாக சர்வதேசப் பொறிமுறை ஆதரிப்பவர்களில் 26.2% தமிழ்ச் சமூகம் இதனையே சுட்டிக்காட்டினர்.
  • போரின் இறுதிக் கட்டங்களின் போது நிகழ்ந்த சம்பவங்களை விசாரணை செய்வது தொடர்பில் சர்வதேசப் பொறிமுறை இருக்க வேண்டும் என நம்புபவர்களிடையே, பதிலளித்தவர்களில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் பெரும்பாலும் நீதிபதிகள், வழக்குத் தொடர்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணை நடத்துபவர்கள் ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என வெளிப்படையாகத் தெரிவித்ததுடன், அதேசமயம், மலையக தமிழ்ச் சமூகம் நீதிபதிகள், வழக்குத் தொடர்பவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணை நடத்துபவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
  • இலங்கையின் நிலைமாற்ற நீதி தொடர்பான செயல்முறை தொடர்பான கேள்வியில், 28.8% இலங்கையர்கள் இழப்பீடுகள் தொடர்பான விடயங்களில், பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட தவறை நிவர்த்தி செய்யும் விதத்திலான சரியான கொள்கைக் கட்டமைப்பின் அவசியத்தை தெரிவிக்கின்றனர்.
  • பிரஜைகள் நம்பிக்கை வைத்துள்ள முக்கிய மூன்று நிறுவனங்கள் இராணுவம் (46.7%), நீதிமன்றம் (40.1%) மற்றும் சிவில் சேவை (22.9%).