2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர்.

இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன. பல வருடகால இடம்பெயர்வுக்குப் பின்னர் உரிமையாளர்களினால் சில காணிகளுக்கு மட்டும் திரும்ப முடிந்துள்ளது. மறுசீரமைப்பை பரிந்துரை செய்தும் நீதியற்ற மற்றும் தன்னிச்சையான நடைமுறைகள் தொடர்பில் எதிர்த்து வழக்காடியும் இடம்பெயர்வு மற்றும் மீள்வருகை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆவணப்படுத்தி வருகின்றது.

இடம்பெயர்வு தொடர்பில் தொடரும் போராட்டங்கள், சொந்த இடங்களுக்கு திரும்புவோருக்கு காத்திருக்கும் சவால்கள் மற்றும் புதிய எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஆகிய விடயங்களை உள்வாங்கும் ‘சம்பூர்’ எனும் தலைப்பிலான ஆவணப்படமொன்றை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உருவாக்கியுள்ளது.

விருதுபெற்ற ஆவணப்பட இயக்குநரான கண்ணன் அருணாசலம் சம்பூர் ஆவணப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ஆவணப்படம் முழுமையாக www.tjsrilanka.org என்ற இணையத்தளத்தில் காணக்கூடியதாக இருப்பதோடு கீழும் தரப்பட்டுள்ளது.

SAMPUR from Centre for Policy Alternatives on Vimeo.