படம் | KILLERCOKE

ஆகஸ்ட் 17, 2015 அன்று, இலங்கையிலுள்ள கொகா கோலா தொழிற்சாலை டீசல் எண்ணெயை களனி ஆற்றினுள் கசியவிட்டு, கொழும்பு புறநகர்ப் பகுதியில் வசிக்கும் பல இலட்சக் கணக்கானவர்களின் நீர் விநியோகத்தை மாசுபடுத்தியது. கொகா கோலா, மென்பானக் கைத்தொழில் துறையில் உலக முன்னோடியான ஓர் அமெரிக்க பல்தேசிய நிறுவனமாகும். உலக ரீதியாக ஓர் அடையாளச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனமாக இருந்த போதிலும், குறிப்பாக நிலையற்ற நீர்ப் பாவனை நடைமுறைகள் தொடர்பாக, அது நேர்மையற்ற சுற்றாடல் பிரச்சினைகள் பலவற்றில் சம்பந்தப்பட்டிருந்தது. இந்தப் பிரச்சினைகளில் சுற்றாடலைக் கடுமையான வகையில் பாதித்து அதன் மூலமாக கொகா கோலா அதன் உற்பத்திகளைத் தயார் செய்வதற்காக வீடு என அழைக்கப்படும் பல பகுதிகளிலுள்ள பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரங்களை மோசமாகப் பாதித்துள்ளது.

தற்போது நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பதற்கு முற்பட்டமைக்காக இலங்கை ஒரு மன்னிப்பைக் கோருகிறது. எவ்வாறாயினும், கொகா கோலா ஏற்படுத்தக் கூடிய மோசமான பாதிப்புகளை உண்மையில், ஏனைய பல சமூகங்களில் ஏற்கனவே ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பற்றி பலரும் அறிந்திருக்காது காணப்படுகின்றனர். அத்தகையதொரு சமூகமே பிளச்சிமடவிலுள்ள ஒரு சமூகமாகும். பிளச்சிமட, இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய மீன்பிடி மற்றும் விவசாயக் கிராமமாகும். 1999இல் கேரளா அரசு இந்தியாவிலுள்ள கொகா கோலா நிறுவனத்தின் ஒரு துணை நிறுவனத்தை பிளச்சிமடக் கிராமத்தில் ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்கு அழைப்பு விடுத்தது. இரண்டு வருடத்தினுள் பிளச்சிமடக் கிராமத்தவர்கள் தொழிற்சாலையின் பாதிப்புகளை உணரத் தொடங்கினர். அவை கடுமையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் மாசாகுதல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அங்கு நடந்த கதை இன்று இலங்கையில் நடந்ததற்கு ஒத்ததாகும்.

கொகா கோலா பிளச்சிமடக் கிராமத்து நிலங்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் கட்மியம் மற்றும் ஈயம் என்பவற்றை மிக அபாயகரமான உயர்ந்த மட்டங்களில் வெளியிட்டது. அது பயிர் வேளாண்மை பொய்த்துப் போவதற்கும் மற்றும் கிராமத்தின் பெறுமதியான நிலத்தடி நீரை மாசுபடுத்தவும் செய்தது. இதற்குப் பதில் நடவடிக்கையாக, பிரதேசத்தின் இயற்கை வளங்களை மேலும் சுரண்டுதல் மற்றும் மாசுபடுத்தல் என்பவற்றிலிருந்து கொகா கோலா நிறுவனத்தை நிறுத்துவதற்கு மக்கள் பரந்தளவில் கீழ் மட்ட நிலையிலான இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இறுதியாக ஆகஸ்ட் 2006 இல், கேரளா அரசு மற்றும் மத்திய அரசின் உணவு அதிகாரசபை என்பன மேலதிக புலன்விசாரணைகள் நடத்தி, பீடைநாசினிகள் மற்றும் அபாயகரமான இரசாயனங்கள் என்பன உற்பத்தியில் காணப்பட்டதாகக் குற்றம் சாட்டி, கொகா கோலா உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்தன. இதைப் போன்ற சம்பவங்கள் மகாராஷ்டிர மாநிலத்தின் வடா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேகடிங்கனி போன்ற நாட்டின் ஏனைய பல இடங்களிலும் நிகழ்ந்ததுடன், ஏனைய பல சமூகங்களும் இதனைப் போன்ற காரணங்களுக்காக கொகா கோலா வசதிகளை எதிர்த்து பிரேரித்தனர்.

பிளச்சிமடவில் ஏற்பட்ட சம்பவங்கள் அண்மையில் களனி ஆற்றுப் பகுதியில் நடைபெற்றதை விட கூடுதல் பாதிப்புக் கொண்டதாக நிரூபிக்கப்படலாம். எவ்வாறாயினும், விசேடமாக கட்டுப்பாடுகள் இல்லாது விடப்படும் போது அநேகமான சந்தர்ப்பங்களில் மேலும் மீறல்களுக்குள்ளாக ஒரு முன்னறிகுறியாக அமைவது தண்ணீர் மாசுபடுதல்களுடன் மாத்திரம் ஆரம்பிக்கும் பிரச்சினைகள் அல்ல. வசதிகள் திட்டமான முறையில் புலன்விசாரணை செய்யப்பட்ட பின்னர் மாத்திரமே அநேகமான சந்தர்ப்பங்களில் மேலதிக பிரச்சினைகள் மற்றும் ஆபத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.

coca_cola_coke_india

இலங்கை அரசு கேரளாவை ஒரு உதாரணமாகக் கொண்டு அதற்கு எதிராக இப்போழுதே ஒரு வலுவான நிலைப்பாட்டை கொகா கோலா நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்தல் வேண்டும். பிளச்சிமட நெருக்கடிகளின் பின் கேரளா அரசு நிலத்தடி நீர் வளங்களுக்கான கேரள நிலத்தடி – கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குபடுத்தல் சட்ட மூலம் 2002ஐ வரைவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இயற்கை வளங்கள் மற்றும் அதன் பிரஜைகளைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல் வேண்டும். தற்போது நிறுவனத்தின் மீது விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறைப்பதற்கும் மற்றும் வழக்கை கொகா கோலா நிறுவனத்திற்கு சாதகமான ஒரு வகையில் தீர்ப்பதற்கும் அரசு அழுத்தங்களுக்கு உள்ளாகிறது. எவ்வாயாயினும், பிளச்சிமடவின் கிராமத்தவர்கள் துன்பப்பட்டது போலானதிலிருந்து இலங்கையர்களைப் பாதுகாப்பதற்கான நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக நிற்பதும் முக்கியமானதாகும். விசேடமாக, சுற்றாடலுக்கு ஆதரவான ஒரு நிறுவனம் என்ற பிம்பத்தை நிறுவனம் அடிக்கடி ஏற்படுத்த முயற்சிப்பதாலும் மற்றும் காலநிலை மாற்றத்தை முகப்பாகப் பயன்படுத்தி அதன் உற்பத்திகள் “இயற்கை சார்ந்தவை” என விளம்பரப்படுத்துவதாலும் கொகா கோலா நிறுவனம் தனது தவறுகளுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் அவசியமாகும். இதனாலேயே எதிர்காலத்தில் இதைப் போன்ற பொறுப்பற்ற நடத்தைகளை தடுப்பதற்கு ஒரு நன்கு தகுந்ததும் மற்றும் கணிசமானதுமான ஒரு அபராதத்தை கொகா கோலா நிறுவனத்திற்கு அரசு விதித்தல் வேண்டும் என்பதோடு, எங்கள் நாட்டின் வளங்களின் அனுகூலங்களைப் பெற்றுக்கொண்டும் மற்றும் அவற்றை மாசுபடுத்துவதிலிருந்து நிறுவனங்களைத் தடுப்பதற்கு சுற்றாடல் கொள்கைக் கட்டுப்பாடுகளை உருவாக்குதல் வேண்டும்.

சம்பவத்தின் உண்மை நிலைகளை மக்களுக்கு அறியப்படுத்தி இந்த நாட்டின் பிரஜைகளைப் பாதுகாப்பதலில் தனது ஆர்வத்தை வெளிக்காட்டுவதும் இலங்கை அரசுக்கு அதேயளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாகும். கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வசிப்போர்களுக்கு இந்த சம்பவத்தின் உடல் ஆரோக்கியம் தொடர்பிலான பாதிப்புகள் பற்றி முழுமையாகத் தெரியாது.

கொகா கோலா நிறுவனம் ஒரு அபராதத் தொகைக்கு மேலதிகமாக நீர் விநியோக சுத்தப்படுத்தல் முறைமையில் ஏற்பட்டுள்ள சேதப்படுத்தலின் முழுமையான செலவுகளைச் செலுத்துதல் வேண்டும் என்பதோடு சுற்றாடல் அதிகாரிகள் அவர்களது முறைகளைக் கிரமமான முறையில் பரிசோதிப்பதற்கு அனுமதித்தலும் வேண்டும். கொகா கோலா நிறுவனம் இவற்றுக்கு இணங்கவில்லையாயின், கேரளா போன்ற பாதிப்புகளில் துன்பப்படுவதிலிருந்து எங்களது நாட்டைத் தடுப்பதற்கு இலங்கையில் கொகா கோலா நிறுவனத்தின் உற்பத்திகளைத் தடைசெய்யும் ஒரு தெரிவைக் கவனத்தில் கொள்வது கூடுதல் பெறுமதி கொண்டதாக இருக்கும்.

ஒரு மன்னிப்பு போதுமானதன்று. ஏனெனில், அதற்கு நாங்களே முகங் கொடுக்கிறோம் – கொகா கோலா நிறுவனம் “கோக் வாழ்க்கையை அதிகரிக்கிறது” (1976) என எண்ணலாம். ஆனால், சிறந்ததை நாங்கள் அறிவோம்!

அரிஷா விக்கிரமநாயக்க

அரிஷா விக்கிரமநாயக்க புளோரிடா, கோரல் கபெலஸ், மியாமி பல்கலைக் கழகத்தில் ஒரு இறுதியாண்டு கல்வி கற்கும் பட்டாதாரி மாணவி. அவர் உயிரியல் மற்றும் சூழலியல் முறை விஞ்ஞானம் மற்றும் கொள்கை ஆகிய இரு துறைகளில் தனது பட்டப் பின்படிப்பைத் தொடர்கிறார்.

###

References:

Chacko, Robin. “The Hindustan Coca-Cola Beverages Pvt. Ltd – The Plachimada Fiasco.” Jananeethi. (2005): 7-32. Print.

Government of Kerala. Ministry of Micro, Small and Medium Enterprises. State Profile of Kerala 2010-2011. Thrissur: MSME- Development Institute, 2011. Web.

Mathews, Rohan. “The Plachimada Struggle against Coca Cola in Southern India.” DPH. Intercultural Resources.

Operandi, Modus. “Water: the Coca Cola Company in Kerala.” Openrim.org. (2007): Web.

“Case against Coca-Cola Kerala State: India.” Righttowater. The Rights to Water and Sanitation. Web.

“Coke’s Crimes in India.” Coke’s Crimes. Killercoke.org. Web.

Koonan, Sujith. “Legal Implications of Plachimada.”International Environmental Law Research Centre. (2007): 1-17. Print.

Coca-Cola: News & Events.” Coca-Cola Enterprises . The Coca-Cola Company.

Other References Not Cited:

“Indians force Coca-Cola bottling facility in Plachimada to shut down, 2001-2006.” Global Nonviolent Action Database. Swarthmore College.

Surendranath, C. “Coca-Cola: Continuing Battle in Kerala”. India Resource Center, 10 Jul 2003. Web.

Majumder, Sanjoy. “Indian state bans Pepsi and Coke.”British Broadcasting Corporation [New Delhi] 9 August 2006.

GROUNDVIEWS தளத்தில் The Coca-Cola Incident – Are we the next Plachimada? என்ற தலைப்பில் வௌிவந்த கட்டுரையின் தமிழாக்கமே மேல் தரப்பட்டுள்ளது.